IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, 6 January 2012

2012-01-06 TREND TODAY

தங்கம்

இன்று 27900 கடந்தால் 28200 வரை மேலே செல்லும். 27500 க்கு கீழ் கடந்து சந்தை முடிந்தால் 26600 வரை கீழே இறங்கும்.

வெள்ளி

53400 ஐ கடந்தால் 54100 வரை செல்லும் 54200 ஐ கடந்தால் 55000 .

தங்கம் வெள்ளி தற்பொழுது இறக்க பாதையில் தான் உள்ளது.அதானால் தான் மேலே ஏறுவதற்கு முன் ஒரு இறக்கம் இறங்கி பின் ஏறுகிறது.இது எப்படி என்றால் தம்மு புடிச்சு மேலே ஏறுவது போன்று தம்மு புடிக்கமுடியல என்றால் அப்படியே FAINT ஆவது போல இங்கயும் BULL FAINT ஆனா என்ன ஆகும் சட சட என கீழ விழுந்து விடும்.

காப்பர்,இயற்கை வாயு,நிக்கல்,கச்சாஎண்ணெய்
எவை அனைத்திற்கும் நேற்றிய பதிவில் உள்ளதை கடைபிடிக்கலாம்.

ஆகையால் சந்தையில் entry ஆவதற்கு முன் சிந்தியுங்கள்.சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் எத்தனை வருடம் சந்தையில் இருக்கிறிர்கள் மற்றும் முக்கியமாக கேட்க வேண்டியவை எவ்வளவு லாபம் செய்துள்ளிர்கள் என்று அவர்கள் லாபம் செய்திருந்தால் அவர்கள் சொல்லும் முறையை ஒரு வாரம் check செய்து பாருங்கள்(பணம் போடாமல் மனதளவில் )சரியாக இருந்தால் கடைபிடிக்கலாம்.

லாபம் செய்யவில்லை நஷ்டம் தான் இப்பொழுது நஷ்டம் வராமல்  வணிகம் செய்வது எப்படி நான் தெரிந்துகொண்டேன் என்றால் அவர்கள் சொல்வதையும் கேட்கலாம் ஆனால் VOLUME TRADE  செய்யவே கூடாது .இன்று பல நபர்கள் நிறைய கற்றுக்கொண்டு மிகவும் திறமையாக செயல் படுகிறார்கள் ஆனால் லாபம் செய்யமுடியவில்லை காரணம்
அவர்களிடம் PLAN ,MONEY MANGEMENT ,இரண்டும் இல்லை.அவர்களிடம்
TALLENT  , ATTITUDE இருக்கிறது.மேலே சொன்ன இரண்டையும் சேர்த்து கொண்டால் இவர்களும் வெற்றியாளர்களே.தயவு செய்து சிந்தியுங்கள்.

வேதம் புதிது சினிமாவில் வரும் ஆற்றங்கரையில் சிறுவனும் சத்யராஜும் நடித்த கட்டத்தை போல நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.உங்களை ஏமாற்றிகொள்ளதிர்கள்.உங்களை நீங்கள் ஏமாற்றிகொண்டால் உங்கள் பணம் தான் நஷ்டம் என்று நினைகாதிர்கள்
அதனால் எவ்வளவு மன உளைச்சல். மாதம் 20000 சம்பாதிக்க ஒருமாதம் உழைத்த பின் கிடைக்கிறது இங்கே ஒரு மணிநேரத்தில் அதை இழந்தாலும் 20000 ரூபாய் தானே பார்துகொல்ள்ளலாம் என்கிறோம் பின் இப்படியே பல லட்சங்களை நஷ்டம் ஆனா பின்னும் இதே மாதிரி இருந்துகொண்டு பல காரணங்களை கூறுவதால் நஷ்டம் லாபம் ஆகாது.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் வேண்டும் என்றும் பின் அதற்க்கு எப்படி செயல்படவேண்டும் என்றும் பின் அதை ஒரே சீராக கையாளவேண்டும் என்றும் முடிவெடுக்க வேண்டும் அதில் ஒரு மாற்றம் கூட இருக்ககூடாது.இப்படி செயல்பட்டாள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வெற்றியாளரே.

இதில் உங்களுக்கு என்ன கஷ்டமாக உள்ளது அதை என்னிடம் கூறுங்கள் நான் விடை தருகிறேன்.

ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்

No comments:

Post a Comment