IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday 30 January 2012

2012-01-30 TREND TODAY

வெள்ளி

58000 ,60000 என்று இலக்கு கொடுத்ததற்கு 57428 வரை சென்று 57244 ல் முடிந்தது.58000 கடந்து முடிந்தால் 60000 .58000 கடக்க முடியாமல் 56500 க்கு  கீழ் வணிகம் நடந்தால் 54000 வரை இறங்கிய பின் மேலே ஏறலாம்.

தங்கம் 

27200 தாங்கு நிலை வைத்துகொண்டு 29000  வரை செல்லும் என்றதற்கு 28084 வரை சென்றுள்ளது மீத இலக்கிற்கு காத்திருப்போம் .

நிக்கல்

1114 ல் ஒரு தடை நிலை இருப்பதால் 1100 க்கு அருகில் லாபம்
 பார்த்துக்கொள்ளவும்.நீண்ட கால முதலீடு  எண்ணம் உள்ளவர்கள் 1280 க்கு காத்திருக்கவும்.

காப்பர்

இன்று 430 வரை செல்லும் அதையும் கடந்து முடிந்தால் 441 இலக்கு

இயற்கை வாயு

155  இலக்கு கொடுக்க தயாராகிவிட்டது.

கச்சாஎண்ணெய்

தற்பொழுதும் கீழ்நோக்கிய திசையில் தான் உள்ளது.


   

Friday 27 January 2012

2012-01-26 TREND TODAY

வெள்ளி

55200 ஐ கடந்தால் 54000 இதில் எந்த சந்தகமும் இல்லை என்றதற்கு 54600 வரை இறங்கிய பின் அமெரிக்காவில் FEDERAL BANK (நம் நாட்டில் RESERVE BANK  OF INDIA )வெளியிட்ட செய்தி POSITIVE ஆக இருந்ததால் மாறி செயல்பட்டு 56420 ல் முடிந்தது .இன்றும் மேல சென்ற பின் தான் இறங்கலாம் மேல 58000  ,60000 என்ற இலக்குகளை
கொண்டுள்ளது . மாற்றங்களை ஏற்றுகொண்டால் தான் நாம் வெற்றியை தேடி செல்லமுடியும்.
STOP LOSS போடகூடாது அப்படி போட்டால் லாபத்தில் இருக்கும் பொழுது சிறிது லாபம் வைத்து STOPLOSS போட்டுகொள்ளலாம்.இப்படி செயல் படுவதால் வந்தால் JACKPOT அல்லது சிறிது லாபம்.பல சமயம் லாபம் இருந்தும் லாபத்தில் இருந்தும் அதை தக்க வைக்க முடியாமல் நஷ்டத்தில் கொண்டுபோய் விடும்.பயன்படுத்திகொள்ளுங்கள்

தங்கம்

29000 தேடி செல்கிறது

நிக்கல்

1280 ஐ தேடி செல்கிறது அவரவர் விருப்பம் போல லாபம் செய்துகொள்ளலாம்

கச்சாஎண்ணெய்

5050 ஐ கடந்து விட்டால் மேல 100 புள்ளி இலக்கு

இயற்கை வாயு
155 வரை செல்லும் என்றதற்கு இன்று 148 வரை செல்லும் பயன்படுத்திகொள்ளுங்கள்.

Wednesday 25 January 2012

2012-01-25 TREND TODAY

வெள்ளி
இன்று 55200 ஐ கடந்தால் 54000 வரை இறங்கி வரும் இதில் எந்த சந்தேகமும் இல்லை 
பயன் படுத்திகொள்ளுங்கள். 

தங்கம்

நேற்று 27540 --27310  என்ற வேலியில் இருந்தது அதன் போல 27533HIGH ம் 27342 LOW ம் கொண்டு முடிந்தது.
இன்று 27230 வரை இறங்கும் பின் தயங்கும்,பின் 27150 க்கு கீழ் சந்தை முடிந்தால்  26500  வரை கண்டிப்பாக இறங்கும்.

இயற்கை வாயு.

நேற்றைய உயரம் 137 .10
138 தடை நிலையாக வைத்து கொண்டு 100  ஐ தேடி செல்கிறது.
மற்றும் 138 ஐ கடந்தால் 155 வரை செல்லும்.என்னடா இரண்டுமே கொடுத்துள்ளார் என்று எண்ணலாம் ஏன் என்றால் 177 ல் TRIANGALE BREAKDOWN ஆகி உள்ளது அதனுடைய மீத இலக்கு 100 அதற்கு முன் BOUNCE BACK என்று சொல்லுவார்கள் அது நடந்தால் 155 வரை நடக்க வாய்ப்பு உள்ளது.அதனால் தான் இரண்டுமே கொடுத்துள்ளேன். இதில் வாங்குபவர்க்கு 117 தான் STOP LOSS ஆனால் விற்பவர்களுக்கு பக்கத்திலேயே STOPLOSS .129 க்கு கீழ் வணிகம் நடக்கும் பொழுது விற்றுகொள்ளலாம்.

மற்றவைகள் சில நிமிடங்களில் ............................

கச்சாஎண்ணெய்
இன்று ஒரு நல்ல நிகழ்வு தெரிந்த பின் தான் முடிவு எடுக்க முடியும் ஏன் என்றால் மீண்டும் இறக்கமா அல்லது மேலே செல்ல உள்ளதா என்பதை பூவா தலையா போல்  இன்று வரும் INVENTORY வைத்து தான் முடிவெடுக்க முடியும் என்பதால் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்த பின் செயல்படலாம்.

நிக்கல்

இதை யாரும் நம்ப போவதில்லை இருந்தாலும் சொல்கிறேன் நம்பினார் கெடுவதில்லை என்பது  நல்லவர்களை  நம்பினால் என்று குறிக்கும்.
நிக்கல் இனி 1280 வரை மேலே செல்லும் தைரியமாக ஒரே ஒரு லாட் வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கு 62500 லாபம். உடனே அது தான் வைத்து சம்பாதிப்பது எங்களுக்கு பழக்கம் இல்லையே.மாற்றி யோசியுங்கள் லாபத்தை கைப்பற்றுங்கள்

மற்றவைகள் ஒருசில நிமிடங்களில்







Monday 23 January 2012

2012-01-23 TREND TODAY

வெள்ளி
56800 வரை கண்டிப்பாக செல்லும் பின் சிறிய இறக்கம் தரும் பின் 59000 வரை ஒருசில தினங்களில்  செல்லும்.

கச்சாஎண்ணெய்

4950 வரை கீழே இறங்கும் என்றதற்கு 4963 வரை இறங்கி 4979 ல் உள்ளது.இனி மேலும் 4900 வந்தபின் சிறிது ஏற்றம் தரும் பயன்படுத்திகொள்ளுங்கள்.புதிதாக யாரும் விற்க வேண்டாம்.ஏற்கனவே விற்றவர்கள் மேலும் லாபத்திற்கு காத்திருக்கலாம்.

மற்றவைகள் ஒருசில நிமிடங்களில்

தங்கம்

27800 ---26900 என்ற வெளியில் உள்ளது.

இயற்கை வாயு

121 ஐ  கடந்தால் 124  வரை செல்லும்.தற்பொழுதும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.REVERSAL வந்தால் தான் நீங்கள் POSITION LONG எடுக்கலாம்.காத்திருக்கவும்

நிக்கல்

இந்த வாரத்தில் 1080 சென்றுவிடும்

காப்பர்

இந்த வரம் முழுவதும் 430 --409  என்ற வெளியில் தான் வணிகம் நடக்கும்

Saturday 21 January 2012

2012-01-21 TREND TODAY

வெள்ளி

மூன்று நாட்களாக 52800 ---53900 குள் வணிகம் நடந்து வந்தது. BREAKOUT 
அனால் 55200 வரை செல்லும் என்றதற்கு (18 ஜனவரி பதிவில் உள்ளது ) 
TARGET க்கு நேற்று  CHANCE கொடுக்காமல் சென்றுவிட்டது.CHANCE MISS ஆகி விட்டதே என்று வருத்த படவேண்டாம்.இனி 52500 தாங்கு 
நிலையாக வைத்து கொண்டு  56800 ,59000 வரை செல்லும்.

Friday 20 January 2012

2012-01-20 TREND TODAY

தங்கம்

இன்று 27200 ஐ கடந்தால் 26800 பின் 26500 என்று செல்லும்.

வெள்ளி

அதே தான் 53900 ---52500 என்ற வேலியில் உள்ளது.காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

தற்பொழுது  முதல் இலக்கு 4950 வரை கீழே இறங்கும்.மேலே சென்றால் 5150 வரை செல்லலாம்.பயன்படுத்திகொள்ளுங்கள்.

காப்பர்

427 ,430 ,438 என்று தடை நிலைகளை கொண்டு உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு தான் மேலே செல்ல முடியும்.ஆகையால் மிகவும் குழப்பமாகவும் செயல்படும்.2 புள்ளி 3 புள்ளி இடைவெளியில்  லாபம் பார்க்கலாம் என்று வணிகம் செய்பவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.

நிக்கல்

1027 ,1030 ல் தடை நிலை உள்ளது இதை கடந்துமுடிந்தால் 1080 வரை செல்லும்.தற்பொழுது உள்ள தாங்கு நிலை 990 .

இயற்கை வாயு

மிகவும் கவலைகிடமாக உள்ளது reversal  வந்தா தான் தெரியும்.இப்பொழுதும் கீழ்நோக்கிய  பாதையில் தான் உள்ளது.ரிஸ்க் எடுப்பவர்கள் 125 stop loss வைத்து கொண்டு விற்பவர்களுக்கு 20 point லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.(இது risk எடுப்பவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.lottery ticket வாங்குவது மாதிரி பின் TRAIL STOP LOSS போட்டு செய்தால் கூட POINT கூட லாபம் பார்க்கலாம்)

ஈயம்
ஏற்கனவே கூறிய இலக்கு 109 வந்துவிட்டது  110 .50 கடக்கமுடியாமல் 108  .50 க்கு கீழ் வந்தால் விற்றுகொள்ளலாம் 105 .50 இலக்கு

துத்தநாகம்

104 வரை செல்லும்

Thursday 19 January 2012

2012-01-19 TREND TODAY

வெள்ளி

நேற்று கூறிய அதே வேலியில் தான் உள்ளது.53900 ----52500 .காத்திருந்து பார்போம்.

தங்கம்

கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.27800 தடை நிலையாக கொண்டு
26500 தேடி செல்கிறது 

மற்றவைகள்   ஒருசில நிமிடங்களில் ..........

இயற்கை வாயு
04-09-2009 ல் 118 .60  வரை இறங்கி பின் 31-12-2009  ல் 258 வரை மேலே சென்று பின் இறங்கி வருகிறது.05-07-2008 ல் 585 .60  என்ற உயரத்தில் இன்று வரை இறங்கி கொண்டு தான் உள்ளது.

118 ல் தாங்கு நிலை உள்ளது அதையும் கடந்து கீழே 115  க்கு  சென்றால் மிக மோசமாக நிலைமை இருக்கும் ஆகையால் மிகவும் கவனமாக செயல்படவும் . 
இப்பொழுது யாரும் வாங்க விற்க வேண்டாம்.

கச்சாஎண்ணெய்

பிப்ரவரி மாத CONTARCT  நேற்றைய LOW ஐ கடந்தால் 200  புள்ளிகள்
இறங்கி வரும் . பயன்படுத்திகொள்ளுங்கள்.

காப்பர்

மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது. 413 ஐ  தாங்குநிலையாக
கொண்டு  436 க்கு தேடி செல்கிறது.பயன்படுத்திகொள்ளுங்கள்.

நிக்கல்

நேற்றைய LOW ஐ கடந்தால் 960  வரை கீழ இறங்கும்.மேல  1005 ஐ கடந்தால் 1022 வரை தான் செல்லும்



Wednesday 18 January 2012

வெள்ளி

மேலே 53850  கீழே 52500 இவைகளுக்கு நடுவில் தான் வணிகம் நடக்கும் பின் நாளின் முடிவில் 53900 கடந்தால் இலக்கு 55200 , கீழே 52200 ஐ கடந்தால் இலக்கு  49300 

தங்கம்

27400 ----27900 இதற்க்கு இடையில் தான் இன்று வணிகம் நடக்கும்.

27350 ஐ கடந்தால் 26800 வரை கீழ இறங்கும்

மற்றவைகள் ஒரு சில நிமிடங்களில் .............................. 

நிக்கல்

1002 ------980 க்கு இடையில் தான் வணிகம் நடக்கும்.

976 க்கு கீழ் வணிகம் நடந்து முடிந்தால் 955 வரை கீழே இறங்கும்

காப்பர்

மேலே 427 கீழே 413 இதற்க்கு இடையில் தான் இன்று வணிகம் நடக்கும்.
427 ஐ கடந்து சந்தை முடிந்தால் 436 

இயற்கை வாயு

125 இலக்கு கொடுத்ததற்கு இன்று 125.80  வரை இறங்கி உள்ளது.லாபம் செய்யாமல் இருந்தால் லாபம் செய்துகொள்ளுங்கள்.தற்சமயம் வாங்கவோ விற்கவோ வேண்டாம்.காத்திருங்கள் .

கச்சாஎண்ணெய்

5060 ல் புதிதாக தாங்கு நிலை உருவாகி உள்ளதால் 5060 கீழ் சந்தை முடிந்தால் 4850 உறுதி ஆகையால் நேற்று ஏற ஏற விற்றுகொள்ளலாம்
என்றதற்கு இன்று யாரேனும் விற்று வைத்திருந்தால்  அவரவர் விருப்பபடி  வெளியில் வந்துவிடவும்.இன்றொரு நாள் காத்திருக்கவும்.







Tuesday 17 January 2012

2012-01-17 TREND TODAY

வெள்ளி

52950 கடந்து சந்தை  முடிந்தால் 53900  வரை மேலே செல்லும்.  கீழே 51750 ஐ கடந்தால்  50000 வரை கீழே இறங்கும்.

தங்கம்

27700 ஐ கடந்தால் 27900 வரை செல்லும். கீழே 27250 கடந்தால் 26500 வரை  இறங்கும்.

கச்சாஎண்ணெய்

மேலே ஏற ஏற விற்றுகொள்ளலாம் 4850 வரை இறங்கும் இடையில் உங்கள் விருப்பம் போல லாபம் செய்துகொள்ளலாம்

காப்பர்

இன்று 427 ஐ கடந்தாலே 436 வரை செல்லும் 427 ஐ கடந்து செல்லும் பொழுது சிறிய இறக்கம் கொடுக்கலாம் அதற்காக பயப்படவேண்டாம்.மேல 436 வரை கண்டிப்பாக செல்லும்

இயற்கை வாயு

125 இன்று வந்து விடும்  பின் 125 ல் வாங்கலாமா ? இன்று காத்திருக்கவும் .


நிக்கல்

நேற்றிய LOW ஐ கடக்காமல் இருந்தாலும் பின் 1011 கடந்து சந்தை முடிந்தால் மேலே செல்லும். ஆகையால் காத்திருந்து செயல் படவும்

STOP LOSS எதற்காக செயல்படுகிறது.நஷ்டத்தை குறைக்க சரி தானே.
ஆமாம். ஆனால் நஷ்டம் குறையவில்லையே.கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தத்தில் பார்த்தால் நஷ்டம் அதிகமாகிவிடுகிறது.

இரண்டு வழிகளில் STOP LOSS ஐ செயல் படுத்தலாம்.

ஒன்று

உதாரணம்
காப்பர் 423 க்கு வாங்கி 426 க்கு விற்கலாம் என்றால் 3000 லாபம் இதற்கு STOP LOSS 421 .50 என்றால் சரி .இது மாதிரி சீராக செயல் படவேண்டும்.

ஒரு நேரம் சரியாய் STOPLOSS ஐ வைத்துக்கொண்டும் மற்றொரு நேரம் STOPLOSS ஐ கூடுதலாக வைத்துக்கொண்டும்,பல நேரம் STOPLOSS 
 இல்லாமலே இப்படிதான் இன்றைய  INTRADAY RADER கள் உள்ளனர். 
இப்படி செயல்பட்டால் நஷ்டம் எப்படி குறையும் என்று நீங்களே கேள்வி கேட்டுகொள்ளுங்கள்.
இதன் தொடர்ச்சி நாளை பார்க்கலாம்








 

Saturday 14 January 2012

2012-01-14 TREND TODAY நாளை தை பொங்கல்.எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்

நாளை தை பொங்கல்.எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல்  வாழ்த்துக்கள்.

வெள்ளி

 இன்றும்  இறங்கும் 50250 க்கு அருகில் ஒருசில தினங்களில் வரும்.

தங்கம்

26800 வரை இறங்கி வரும்.

கச்சாஎண்ணெய்

5160 வரை மேலே செல்லலாம் உறுதி கிடையாது ஆனால் 4850  வரை கீழே இறங்கும்.

நிக்கல் காப்பர் இயற்கை வாயு மற்றும் ஒரு சில நிமிடங்களில் பார்த்துகொள்ளலாம்

இயற்கை வாயு

இன்று அல்லது திங்கள் நீங்கள் எதிர்பார்த்த 125 ஐ பார்க்கலாம்

நிக்கல்

1004 அல்லது 990 தாங்கு நிலை கொண்டுள்ளது. காத்திருந்து பார்போம்.

ஈயம்

நேற்று கூறியதை பின்பற்றுங்கள் 

துத்தநாகம்

இன்று அல்லது திங்கள் 103 ஐ அடைந்துவிடும்

காப்பர்

413 வரை இறங்கலாம் பின் திரும்பும்

அலுமினியம்

நேற்று 109 க்கு இறங்கி வந்தது

Friday 13 January 2012

2012-01-13 TREND TODAY

வெள்ளி

இன்று 52000 க்கு கீழ் வணிகம் நடக்காத வரையில் மேல தான் செல்லும் அதே நேரம் 53600 ஐ கடந்தால் தான் 55000 வரை செல்லும்.

தங்கம்

27900 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.அதை கடந்து விட்டாலும் சிறிதளவு தான் மேல ஏறும்.

காப்பர்

நேற்றைய உயரம் 418  .80 ஐ கடந்தால் 425 வரை செல்லும்.

இயற்கை வாயு

162 நடந்து கொண்டிருக்கும் பொழுது 150 tgt கொடுத்தேன் நடந்தது பின் 125 tgt க்கு 138 .20 வரை இறங்கி உள்ளது மீதத்தையும் பார்க்கலாம்.

நிக்கல்

மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது பயன்படுத்திகொள்ளுங்கள்.

துத்தநாகம்

103 வரை மேல செல்லும்.

ஈயம்.

105 .30 கடந்தால் 109 வரை செல்லும்

அலுமினியம் 

109 வரி கீழே இறங்கும் அதையும் கடந்தால் 107 வரை இறங்கும்.


கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இல்லை என்றாலும் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இருக்குமாயின் அவர்களிடம் கூறி பழைய பதிவுகளை  5 நாட்கள் முன் இருந்து பார்த்து வந்தால் தான் சரியாக புரியும்.
வார்த்தைகளை கவனமாக (அதாவது சந்தை முடிந்தால்,4780 ஐ கடந்தால், நேற்றைய உயரத்தை கடந்து சந்தை முடிந்தால் ,வேலியில் உள்ளது அதை கடந்து முடிந்தால் )புரிந்துகொன்டு செயல்படவும். 

Thursday 12 January 2012

வெள்ளி

52300 --53100 என்ற வேலியில் உள்ளது.மேலே கடந்தால் 54500 ,கீழே கடந்தால் 48500 .

தங்கம்

27900  -27450 க்குள் தான் இன்று நடக்கவேண்டும்.காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

5340 கடந்து இன்று சந்தை முடிந்தால் மீண்டும் மேல செல்ல ஆரம்பிக்கும் பின் தற்பொழுது கொடுத்த உயரத்தை 5498 ஐ கடக்கும்.

இயற்கை வாயு

125 க்கு கண்டிப்பாக கீழே இறங்கி வரும்.சிறிது ஏற்றம் கொடுத்து விட்டும் வரலாம்.ஆனால் 125 கண்டிப்பாக வரும் .

காப்பர்

இன்று 415 வரை மேலே செல்லும்

நிக்கல்

நேற்றைய உயரத்தை 1017 .50 கடந்தால் 1040 வரை செல்லும்

Wednesday 11 January 2012

2012-01-11 TREND TODAY

வெள்ளி

53600 வரை மேல செல்லலாம்.

தங்கம்

27900 வரை மேல செல்லலாம்

இயற்கை வாயு நேற்று 150 க்கு அருகில் வந்தது.

கச்சாஎண்ணெய் ,நிக்கல்  நேற்று கூறியதையே கடைபிடியுங்கள்

Tuesday 10 January 2012

2012-01-10 TREND TODAY

தங்கம்

தற்பொழுது 26900 --27900 என்ற வேலியில் உள்ளது.26900 ஐ கடந்து சந்தை முடிந்தால் 25800 வரை இறங்கும்.மொத்தத்தில் இறங்குமுகமாகத்தான் உள்ளது.ஆகையால் ஒரு ஏற்றம் என்றால் இரண்டுமடங்கு இறங்கும்.கவனமாக செயல்படவும் .

வெள்ளி
52400 வரை மேல சென்றால் செல்லலாம் ஆனால் கீழே 48500 க்கு கண்டிப்பாக கீழே வரும்.

கச்சாஎண்ணெய்

5250  ல் தாங்கு நிலை உள்ளது அதையும் கடந்து சந்தை முடிந்தால் 5100
இவ்வளவு தான் கீழே இறங்கும் மேலே 6100 உறுதியாக செல்லும்.
மேலே இப்பொழுது தடை நிலை இல்லை ஆகையால் ஒரு இறக்கம் இறங்கினால் இரண்டுமடங்கு ஏறும்.ஒவ்வொரு இறக்கத்தில் வாங்குங்கள் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

காப்பர்
இன்று 397 க்கு கீழ் சந்தை முடிந்தால் 372  வரை இறங்கும்.

நிக்கல்

1125  க்கு மேல செல்லும் என்று எழுதிருந்தேன்.கொஞ்சம் சிரமப்பட்டு தான் வரும் 1016 ஐ கடந்தால் தான் வரும் அதனால் 1016 க்கு மேல் சந்தை முடிந்தால் வாங்கலாம்.

இயற்க்கை வாயு

கண்டிப்பாக 150 க்கு கீழ் இறங்கி வரும்

Monday 9 January 2012

2012-01-09 TREND TODAY

தங்கம்

25000 த்தை தேடி ஒருசில தினங்களில்   இறங்கும்

வெள்ளி

ஒருசில தினங்களில்  48500 வரை கீழே இறங்கும்

Friday 6 January 2012

2012-01-06 TREND TODAY

தங்கம்

இன்று 27900 கடந்தால் 28200 வரை மேலே செல்லும். 27500 க்கு கீழ் கடந்து சந்தை முடிந்தால் 26600 வரை கீழே இறங்கும்.

வெள்ளி

53400 ஐ கடந்தால் 54100 வரை செல்லும் 54200 ஐ கடந்தால் 55000 .

தங்கம் வெள்ளி தற்பொழுது இறக்க பாதையில் தான் உள்ளது.அதானால் தான் மேலே ஏறுவதற்கு முன் ஒரு இறக்கம் இறங்கி பின் ஏறுகிறது.இது எப்படி என்றால் தம்மு புடிச்சு மேலே ஏறுவது போன்று தம்மு புடிக்கமுடியல என்றால் அப்படியே FAINT ஆவது போல இங்கயும் BULL FAINT ஆனா என்ன ஆகும் சட சட என கீழ விழுந்து விடும்.

காப்பர்,இயற்கை வாயு,நிக்கல்,கச்சாஎண்ணெய்
எவை அனைத்திற்கும் நேற்றிய பதிவில் உள்ளதை கடைபிடிக்கலாம்.

ஆகையால் சந்தையில் entry ஆவதற்கு முன் சிந்தியுங்கள்.சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் எத்தனை வருடம் சந்தையில் இருக்கிறிர்கள் மற்றும் முக்கியமாக கேட்க வேண்டியவை எவ்வளவு லாபம் செய்துள்ளிர்கள் என்று அவர்கள் லாபம் செய்திருந்தால் அவர்கள் சொல்லும் முறையை ஒரு வாரம் check செய்து பாருங்கள்(பணம் போடாமல் மனதளவில் )சரியாக இருந்தால் கடைபிடிக்கலாம்.

லாபம் செய்யவில்லை நஷ்டம் தான் இப்பொழுது நஷ்டம் வராமல்  வணிகம் செய்வது எப்படி நான் தெரிந்துகொண்டேன் என்றால் அவர்கள் சொல்வதையும் கேட்கலாம் ஆனால் VOLUME TRADE  செய்யவே கூடாது .இன்று பல நபர்கள் நிறைய கற்றுக்கொண்டு மிகவும் திறமையாக செயல் படுகிறார்கள் ஆனால் லாபம் செய்யமுடியவில்லை காரணம்
அவர்களிடம் PLAN ,MONEY MANGEMENT ,இரண்டும் இல்லை.அவர்களிடம்
TALLENT  , ATTITUDE இருக்கிறது.மேலே சொன்ன இரண்டையும் சேர்த்து கொண்டால் இவர்களும் வெற்றியாளர்களே.தயவு செய்து சிந்தியுங்கள்.

வேதம் புதிது சினிமாவில் வரும் ஆற்றங்கரையில் சிறுவனும் சத்யராஜும் நடித்த கட்டத்தை போல நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.உங்களை ஏமாற்றிகொள்ளதிர்கள்.உங்களை நீங்கள் ஏமாற்றிகொண்டால் உங்கள் பணம் தான் நஷ்டம் என்று நினைகாதிர்கள்
அதனால் எவ்வளவு மன உளைச்சல். மாதம் 20000 சம்பாதிக்க ஒருமாதம் உழைத்த பின் கிடைக்கிறது இங்கே ஒரு மணிநேரத்தில் அதை இழந்தாலும் 20000 ரூபாய் தானே பார்துகொல்ள்ளலாம் என்கிறோம் பின் இப்படியே பல லட்சங்களை நஷ்டம் ஆனா பின்னும் இதே மாதிரி இருந்துகொண்டு பல காரணங்களை கூறுவதால் நஷ்டம் லாபம் ஆகாது.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் வேண்டும் என்றும் பின் அதற்க்கு எப்படி செயல்படவேண்டும் என்றும் பின் அதை ஒரே சீராக கையாளவேண்டும் என்றும் முடிவெடுக்க வேண்டும் அதில் ஒரு மாற்றம் கூட இருக்ககூடாது.இப்படி செயல்பட்டாள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வெற்றியாளரே.

இதில் உங்களுக்கு என்ன கஷ்டமாக உள்ளது அதை என்னிடம் கூறுங்கள் நான் விடை தருகிறேன்.

ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்

Thursday 5 January 2012

2012-01-05 TREND TODAY

தங்கம்

மேல 28150 ஐ கடந்தால் 28400 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

வெள்ளி

53500 கடந்தால் ஒரு சில தினங்களில் 55600 க்கு அருகில்  செல்ல வாய்ப்பு உள்ளது.53500 கடக்காமல் 52250 க்கு கீழ் சந்தை முடிந்தால் 48600 க்கு உறுதியாக கீழே இறங்கும்.

கச்சாஎண்ணெய்

5250 ஐ தாங்கு நிலையாக வைத்துகொண்டு 6000 த்தை தேடி செல்கிறது.

காப்பர் 

400 ஐ தாங்கு நிலையாக வைத்துகொண்டு 418 ஐ தேடி செல்கிறது

நிக்கல்

960 தாங்கு நிலையாக வைத்துகொண்டு 1125 தேடி செல்கிறது

இயற்க்கை வாயு

168  ஐ தடையாக வைத்து கொண்டு 150 ஐ தேடி கீழே செல்கிறது.

100 நபர்கள் MAIL மூலம் விருப்பம் தெரிவித்தால் கண்டிப்பாக INDRADAY  டிப்ஸ் தர நினைகின்றேன்.

உங்கள் விருப்பம் என்னுடைய செயல் எல்லோருக்கும் லாபம்.

INTRADAY   TIPS ABSOLUTELY FREE (MINIMUM 5 CALLS PER DAY )













Wednesday 4 January 2012

2012-01-04 TREND TODAY

வெள்ளி

48500 ----55000 என்ற வேலியிலும் கீழ் நோக்கிய பாதையிலும் தான் உள்ளது.
ஆகையால்நேற்றைய HIGH ஐ கடந்தால்  மேலே 55000  சென்றபின் கீழே வரும்  ஆனால் கீழே 48500 க்கு  வரும்.

தங்கம் 28150 --26600 என்ற வேலியில் உள்ளது. மற்றும் இன்று நேற்றைய  HIGH ஐ கடந்தால் 28150 வரை மேலே செல்லும் மற்றும் இன்று கீழறங்கி சந்தை முடிந்தால் 26600 க்கு கீழே வரும்.

கச்சாஎண்ணெய்

கூடிய விரைவில் 6000 த்தை தேடி செல்லும் நீங்களும் அதன்வழியில் சென்று பயன்பெறுவீர்கள்.




Tuesday 3 January 2012

2012-01-03 TREND TODAY

தங்கம் வெள்ளி இரண்டுமே கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது. சிறிது ஏற்றம் தரலாம் ஆனால் கீழே தான் வரும்.
தங்கம் 26100 ,வெள்ளி 47000 காத்திருந்து பார்போம்.

Monday 2 January 2012

2012-01-02 TREND TODAY

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு  2012 வாழ்த்துக்கள்

இன்று அமெரிக்கா பங்கு சந்தை விடுமுறை என்பதால் நாளை சந்திப்போம்.