IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday, 20 November 2011

2011-11-20 இன்று கமோடிட்டி டிரேடிங் என்றால் என்ன அதன் பயன்களும்

  COMMODITY என்றால் என்ன ?
பண்டகம்,பொருட்கள் அதாவது வியாபார சரக்கு,விலை போகும் சாமான் ஒரு பகுதியை போல மற்றொரு பகுதியும் சீரான தரமும் ஒரே விதமான தரமாகவும் கிடைக்ககூடியது.

COMMODITY TRADING என்றால் என்ன?

இரண்டு வழிகள்

ஒன்று SPOT ட்ரேடிங் மற்றொன்று FUTURE ட்ரேடிங்

இப்பொழுது SPOT ட்ரேடிங் என்றால் என்ன?

SPOT ட்ரேடிங் ல் உள்ளபடி ,நேர்போருளாக ,நேர்சரியாக பொருட்களை பொதுவாகவும் வழக்கமாகவும் முழு தொகையை கொடுத்து அப்பொழுதே பொருட்களை பெற்றுகொள்வது .

ப்யுச்சர் ட்ரேடிங்  என்றால் எதிர்கால வர்த்தகம் அதாவது இங்கே உண்மையான பொருட்கள் எதுவும் கைமாறுவது இல்லை மாறாக ஒரு குறிப்பிட்ட விலை மற்றும் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்த குறிப்பிட்ட பொருட்களை வாங்க அல்லது விற்க ஒரு ஒப்பந்தம்.இப்படிதான் பெரும்பாலான பொருட்களின் வர்த்தகம் நடைபெறுகிறது.இதற்கு பெயர் தான் ப்யுச்சர் ட்ரேடிங்.

கமோடிட்டி ட்ரேடிங் ல் எதிர்கால வர்த்தகம் (FUTURE TRADING ) மத்திய அரசாங்க அனுமதியுடன் ஏற்பாடு செய்து உள்ளது.

உங்களுக்கு தெரிந்ததா உலகளவிலான வர்த்தக அளவில் நான்கு ஐந்து மடங்கு பங்கு சந்தை காட்டிலும் கமோடிட்டி ட்ரேடிங் நடக்கிறது.

தற்பொழுது பல சரக்குகள், பொருட்கள் ,விவசாயம் (தோட்டம் உள்பட )கனிமம் மற்றும் படிம பிறப்பிடம் எல்லாவற்றிகும் ஆதரவு தந்து கமோடிட்டி ட்ரேடிங் அனுமதிக்கபடுகிறது.
நமக்கு மிகவும் பழக்கமாக உள்ள பங்கு சந்தை ,பங்குகள் கமோடிட்டி பொருட்கள் எல்லாமே உலகளவில் ஏற்றுகொண்ட சொத்து வர்க்கம்.
(ASSET CLASS )
அதிகமாக வர்த்தகமாகும் கமோடிட்டி

பொன்(BULLION ) :தங்கம் ,வெள்ளி, வெண்தங்கம் (PLATINUM )
மூல உலோகம்(BASE METAL ) : NICKEL (வன் வெள்ளி ),COPPER (தாமிரம் ),TIN (தகரம்),ZINC (துத்தநாகம்).ALUMINIUM (அலுமினியம்),LEAD (ஈயம்)
இரும்பு உலோகம்(FERROUS METAL ): நீண்ட எஃகு (STEEL LONG )
கூழ் வகைகள் (CEREALS ): WHEET (கோதுமை),MAIZE (மக்கா சோளம்)BARLEY (வால் கோதுமை)
மசாலா (SPICES ):மிளகு (PEPPER ),சிவப்பு மிளகாய் (RED CHILLI ),ஏலக்காய்(CARDAMOM ),ஜீரா (JEERA ),மஞ்சள் (TURMERIC )
சக்தி &வாயு (ENERGY &GAS ):கச்சா எண்ணெய் (CRUDE OIL ),இயற்கை வாயு (NATURAL GAS ),கல்லெண்ணெய் (GASOLINE ),வெப்பமூட்டும் எண்ணெய் (HEATING OIL ), விமானத்திற்கு பயன்படும் எரிபொருள் (ATF :AVIATION TURBINE FUEL )
எண்ணெய்&எண்ணெய் விதைகள் (OIL &OILSEEDS ):ஆமணக்கு எண்ணெய் (CASTOR OIL ), SOYBEAN (சோயாபீன்ஸ் ),REFINED OIL (தூய்மித்த எண்ணெய் ) FIBRE (நார்) :COTTON (பருத்தி)
PULSES :( பருப்பு வகைகள்) :CHANNA (கொண்டை கடலை)
PLANTATION (தோட்டம்) :RUBBER (ரப்பர் ),COFFEE  ( காபி )
OTHERS (மற்றவை):GUR (வெல்லம்) ,SUGAR (சர்க்கரை),MENTHOL OIL (கற்பூரியம் எண்ணெய்),POTATO  (உருளை கிழங்கு),GUARGUM (கொத்தவரைக்காய்) GUARSEED (கொத்தவரைக்காய் விதை)

கமோடிட்டி சந்தையை யார் கட்டுபடுத்துகிறார்கள்
MCX (MULTI  COMMODITY EXCHANGE  OF INDIA LTD ) , NCDEX (NATIONAL COMMODITY & DERIVATIVES  EXCHANGE  LTD ) NMCE (NATIONAL MULTI COMMODITY EXCHANGE OF  INDIA LTD) இவைகள் அனைத்தையும் FMC (FORWARD MARKETS COMMISSION ) கட்டுபடுத்துகிறது.
பயன்களை நாளை பார்போம்

No comments:

Post a Comment