மேலே கொடுத்துள்ளது தங்கத்தின் ஒரு நாள் கேண்டில் சார்ட் .இதில் தாங்கு (SUPPORT) நிலை கோடுகள் இரண்டு உள்ளது இதில் மேலே உள்ள கோட்டிற்கு அருகில் சென்று திரும்பியுள்ளது.தடை (RESISTANCE) நிலை கோடுகள் இரண்டு உள்ளது.நன்றாக கவனியுங்கள் SYMETRICAL TRIANGLE சம கோண முக்கோணம் மற்றும் CHANNEL தெரியும். சேனல் என்பது ஒரு பாதை மாதிரி மேல் கோட்டிற்கும் கீழ் கோட்டிற்கும் இடையிலேயே சந்தை செல்வது.
இதைஎல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தற்பொழுது சேனல் லில் செல்கிறது.30100 ஐ கடந்து சந்தை முடிந்தால் 31200 வரை மேலே செல்லும்.அதாவது சேனல் இன் மேல் கோடு தான் 31200.கடக்க முடியவில்லை என்றால் 28400 வரை கீழ் இறங்கும். ஆகையால் மிகவும் கவனத்துடன் வணிகத்தில் செயல்படவும் .29270 க்கு கீழ் இன்று சந்தை முடிந்தால் 28400 க்கு அருகில் இறங்கி வரும்.ஆகையால் 30100 க்கு மேல் சந்தை முடிந்தால் வாங்கிகொள்ளவும் STOPLOSS 29270சந்தை முடியும்பொழுது கீழ் இருந்தால்.
மற்ற வெள்ளி, காப்பர்,கச்சா எண்ணெய் களுக்கு சிறிது நேரத்தில் பார்த்து கொள்ளவும் .

No comments:
Post a Comment